சென்னை: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காமானார். இவருக்கு வயது 99.
பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கொல்லங்குடி கருப்பாயி. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இவர் வயது முதிர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

99 வயதாகும் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் வசித்தவந்த நிலையில், வயது மூப்பால் காலமானார் . இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளதுடன், ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். மறைந்த கொல்லங்குடி கருப்பாயிக்கு 1993ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், நாட்டுப்புற பாடல்களின் முன்னோடிகளில் ஒருவரும், திரைப்படக் கலைஞருமான, கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கொல்லங்குடி கருப்பாயி அம்மா அவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ள பெருமைக்குரியவர். தமிழ்த் திரையுலகில், நாட்டுப்புற பாடல்கள் இடம்பெற, முக்கிய காரணங்களில் ஒருவர். கலைமாமணி விருது பெற்றவர்.