டெல்லி

டெல்லியில் கடும் வெ[[அம் நிலவுவதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

தற்போது டெல்லி நகரம் கடும் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் வெயில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றிருக்கிறது. ஆயினு, காற்றின் ஈரப்பதம் காரணமாக அது 125 டிகிரியை உணர வைக்கிறது. மேலும் இரவில்கூட பகல் போன்ற வெப்ப சூழலே தென்படுகிறது.

நஜரில் ஏ.சி. பயன்படுத்தினாலும் பெரிய அளவில் இதம் இல்லை.  மேலும் ஏ.சி. வசதி இல்லாத மக்களின் நிலைமை பரிதாபமாகவே தெரிகிறது. \ வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு நேற்று சிவப்பு  எச்சரிக்கை விடப்பட்டது.

இதைபோல் இன்றும்  எச்சரிக்கை நீடிக்கிறது. மாலைக்கு பிறகு நிலைமை ஓரளவு சரியாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். டெல்லி மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் பல இடங்களில் வெப்ப அலை கடுமையாக உள்ளது.