அகமதாபாத்: 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம்  குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதில் பயணம் செய்த  பயணிகள் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி கரும்புகையினால் சூழப்பட்டுள்ளதால், அதில் இருந்த பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மேகனிநகரில் உள்ள தடயவியல் குறுக்கு சாலை அருகே ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. ஐஜிபி மைதானத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

அகமதாபாத்-லண்டன் கேட்விக் விமானம் இன்று, ஜூன் 12, 2025 அன்று ஒரு  விபத்தில்   சிக்கியது. என்பதை  ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

அகமதாபாத்தில் இருந்து கேட்விக் வரை AI-171 விமானத்தை இயக்கும் ஏர் இந்தியா B787 விமானம் VT-ANB, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். இந்த விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இருந்தது: சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA)  தெரிவித்துள்ளது. விமானத்தில்மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.