டெல்லி
மத்திய அமைச்சரவை ரூ. 6405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன இவற்றில் ரயில்வே திட்டங்கள் குரித்த முடிவுகள் பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்
அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்.,
”ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய ரயில்வேயின் இரண்டு மல்டிடிராக்கிங் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 318 கி.மீ. அதிகரிக்கும். திட்டங்களின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு ரூ.6,405 கோடி. 133 கி.மீ நீளத்திற்கு கோடர்மா – பர்கானா வழித்தடத்தை இரட்டைமயமாக்கும் திட்டம்; 185 கி.மீ தூரமுள்ள பல்லாரி – சிக்ஜாஜூர் இரட்டிப்பு ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் பயணிகளின் பயண வசதியை மேம்படுத்துவதோடு, தளவாடச் செலவைக் குறைக்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, குறைந்த கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுக்கு பங்களிக்கும். நிலையான மற்றும் திறமையான ரயில் செயல்பாடுகளை ஆதரிக்கும். மேலும் இந்த திட்டங்கள், கட்டுமானத்தின் போது சுமார் 108 லட்சம் மனித நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும்”
என அறிவித்துள்ளார்.