னாஜி

கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர் ருத்ரேஷ் கூறி உள்ளார்.

கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய போது கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.

பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி போட மறுத்த ஒரே காரணத்துக்காகவே அமைச்சர் இப்படி நடந்து கொண்டதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.  கோவா அமைச்சரின் இந்த அடாவடியை கண்டித்து கோவா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தனது கடுமையான வார்த்தைகளுக்கு டாக்டர் விஷ்வஜித் ரானாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மருத்துவ பணியாளர்களை அவமானப்படுத்துவது என் எண்ணம் அல்ல என்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மந்திரி விஷ்வஜித் ரானா கூறினார்.

டாக்டர் ருத்ரேஷ் இது குறித்து,

”அமைச்சர் விஷ்வஜித் ரானா ஸ்டுடியோவில் வைத்து மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் என்னை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் வைத்து அவமதித்தார். அதே இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’

எனக் கூறியுள்ளார்