சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க  தமிழ்நாடு அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் திட்டமிட்டு உள்ளது.  அதன்படி, இந்த கட்டித்தின் 3வது மாடியில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த திட்டம்  விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மக்களின் பெரும் வரவேற் பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், தற்போது புறநகர் வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில்  அண்ணாநகர் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில்  உள்ள காலியான பகுதியில்,  9 மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்திற்குள்ளே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட் உள்ளது.   மெட்ரோ ரயில் சென்று வெளியே வரும்வகையில், இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக,  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), திருமங்கலம் நிலையத்தில் புதிய 12-மாடி கோபுரத்தை கட்டி வருகிறது, இது மூன்றாவது மாடியில் உள்ள மெட்ரோ நிலையத்தை ஒருங்கிணைக்கிறது. மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம், கட்டிடங்கள், மக்கள், செயல்பாடுகள் மற்றும் பொது போக்குவரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்ரோவிற்கான வருவாயை அதிகரிப்பதும், அதிகமான மக்கள் வெகுஜன விரைவு போக்குவரத்து முறையைப் பயன்படுத்த ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

இந்த புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பு திட்டத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுபோன்ற ஒரு கட்டமைப்பு, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில், அந்த   வணிக வளாகத்தில் ஒரு வழியாக வழியாக  மறுபும் வெளியே  வந்து செல்லும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

0 மாடிகளை கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.