சென்னை: 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக உள்ளது தமிழ்நாடு என சென்னையில் நடைபெற்ற உலக வங்கி வணிக மைய திறப்பு விழாவில் உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்கிறது. 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக தமிழ்நாடு உள்ளது என்றர்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கிப் பெரும் பங்கு வகிக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 3ஆம் கட்டமாக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பெரும் பங்கு வகிக்கிறது. இதற்க உலக வங்கி பெரிய அளவில் உதவியிருக்கிறது.. ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில் கடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான குடியிருப்புகளை உருவாக்க 190 மல்லியன் டாலர் கடனை உலக வங்கி தந்துள்ளது.

உலக வங்கி உதவியுடன் வரும் 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஊரகப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஊரகப் பகுதி ஏழை மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கியுடன் வெறும் நிதி மட்டுமல்லாமல் நிபுணத்துவத்தையும் பெற்று தமிழகம் செயல்பட்டு வருகிறது.

உலக வங்கியின் உடனான வணிக உறவு பல நட்புகளை கொடுத்துள்ளது என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கி பங்கு உள்ளது. சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 2023ன் கணக்குப்படி தமிழ்நாட்டில் 63 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிக்கின்றனர். தமிழ்நாடு நீர்வளம், நிலவளம் திட்டம் நவீனமயமாக்கலுக்கு வித்திடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு உலக வங்கிகள் நிதி அளித்துள்ளது என்றும், இதன் மூலம் இந்தியாவின் என்ஜின்-ஆக தமிழ்நாடு விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.