டெல்லி: பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலன் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையிலி, அந்நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், தற்போது இணைய சேவையை வழங்கி வரும், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இதனால் இணைய போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். ஆனால், தற்போதுதான் அதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 2 ஆண்டுகள் காத்திருந்து ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு இப்போது தான் அனுமதி கிடைத்துள்ளது. குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் சேவையை தொடங்குவதற்கான ‘சேட்டிலைட் கம்யூனிகேஷன்’ என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.
ஏற்கனவே இந்த உரிமத்தை இதுவரை இரண்டு நிறுவனங்களுக்கு இந்தியா வழங்கி உள்ளது. அதாவது Eutelsat’s one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இந்த உரிமத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஸ்டார்லிங் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (GMPCS) உரிமத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனம் , இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலன் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை கிடைக்கும் என்பதால் இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது கிராமப்புற பகுதிகளுக்கும் பெரிதும் பயனாக இருக்கும் என்பதால் ஸ்டார்லிங் இணைய சேவைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது அறிமுக திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு டிஷ் வாங்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் உரிமம் பெற்றுள்ள ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவை சோதனை முயற்சி விரைவில் இந்தியாவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு மக்களுக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழியாக அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டார்லிங் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக இன்டர்நெட் சேவை கிடைக்க உள்ளது. மேலும் இந்த ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பொறுத்தவரை வழக்கமான Geostationary satellites விட முற்றிலும் வித்தியாசமானது. அதாவது ஸ்டார்லிங் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் 7,000 LEO செயற்கோள்களை பயன்படுத்துகிறது. மேலும் எலான் மஸ்க் நிறுவனத்தின் என்ட்ரியை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சந்தியா சில நாட்களுக்கு முன்பே உறுதி செய்திருந்தார். பின்பு ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு விரைவில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடக்கும் எனவும் சொல்லி இருந்தார். இந்நிலையில்தான் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு இணையச் சேவைகளை வழங்க உரிமம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டார்லிங் நிறுவனம் ஆனது 130 நாடுகளில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ்,நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் கூட இந்த சேவையை எலான் மஸ்க் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை இந்தியாவிலும் கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ஸ்டார்லிங்’ நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான இணையச் சேவை கட்டணம் பற்றிய இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை. தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.