நிலம்பூர்
வரும் 14 ஆம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேரளா வருகிறார்.

வரும் 19 ஆம் தேதி அன்று கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது, இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி சார்பில் ஆரியாடன் சவுகத் போட்டியிடுகிறார்.
ஆரியாடன் சவுகத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா எம்.பி. வருகிற 14 ஆம் தேதி நிலம்பூர் வந்து நிலம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நிலம்பூர் தொகுதியில் காக்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.