சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 5 நாட்களில் பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக அரசு போக்குவரத்து தெரிவித்து உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பேருந்து நிலையத்தை தமிழ்நாடு தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் மிக பிரமாண்டமாக கட்டி திறந்தது. இருந்தாலும், கிளாம்பாக்கம், தாம்பரம் உள்பட சென்னையில் போக்குவரத்த நெரிசல் குறைந்தபாடில்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதி அடைவதுடன், கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் குதித்ததை அனைவரும் அறிந்ததே.

இதற்கிடையில், வெளியூர் செல்வபவர்களுக்கும், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களும் சென்னை நகர்பகுதி செங்கல்பட்டு முதல் கிளம்பாக்கம் வரை பல கிலோ மீட்டர் தூரம் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு எந்தவொரு முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை
இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜூன் 4-ம் தேதி ஜூன் 8-ம் தேதி அதிகாலை வரை 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கடந்த 4-ம் தேதி இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் இருபுறமும் 3 கி.மீ. வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மேலும், போக்குவரத்து துறை மீது பயணிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதற்கு அரசு விரைவுபோக்குவரத்துக்கழகம் அளித்த விளக்கத்தில், நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக பயணிகள் வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும்,பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜூன் 4-ம் தேதி ஜூன் 8-ம் தேதி அதிகாலை வரை 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளனர். இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், போக்குவரத்து துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தின் வாயிலாக, ஜூன் 7-ம் தேதி நள்ளிரவு 24 மணி நிலவரப்படியும் மற்றும் ஜூன் 8 அதிகாலை 2.00 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளும், 936 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மொத்தம் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி அதிகாலை 2 மணி வரை 11,026 பேருந்துகளில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 430 பேர் பயணம் செய்துள்ளனர்.