சென்னை: தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? என்ற கேள்விக்கும், 2026ல் கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியிருப்பது குறித்தும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு வாழ்த்தினார். மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் 13ம்தேதி வெளியாகும் படைத்தலைவன் படம் பற்றிய முக்கிய தகவலை அப்போது வெளியிட்டார்.

கரூர் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, எங்கள் அரசியல் பயணம் வேகமாக தொடருகிறது. பா.ஜ.,வில் இருந்து, கூட்டணி பேச்சுக்கு, எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றவர், அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று, நாங்கள் எங்கும் சொல்லவில்லை என்றார்.
மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுவது குறித்து எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டது என்றவர், அதில் எந்த ஆண்டு என்பது குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது, 2026 இல் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றவர், 234 தொகுதிக்கும் 2 நாள்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நன்றி சொன்னோம். இது அரசியல் நாகரிகம். எந்த கட்சியாக இருந்தாலும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, அதற்கு நன்றி சொல்வது அரசியல் மாண்பு. அதைத்தான் நாங்கள் செய்தோம். “திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம் என்றார். இதனால் கூட்டணி மாறுமா, அதே கூட்டணி தொடருமா என்ற கற்பனை தேவையில்லை.
2026ல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான் என்றார். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக சுட்டி காட்ட முடியும்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ஏற்கனவே 2026ல் கூட்டணி ஆட்சி என விஜய் அழைப்பு விடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், கரூர் மாவட்டத்தில் மணல் கொல்லை அமோக நடைபெற்று வருவதாக தெரிவித்தவர், மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் மது விற்பனை, கரூர் மாவட்டத்தின் பழைய பஸ் ஸ்டாண்டு, புதிய ஸ்டாண்டுகளில் 24மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக குற்றம் சாட்டியவர், அரசு தடை செய்த கள்ள லாட்டரி விற்பனையும் அதிகம் நடைபெற்ற வருகிறது. மேலம்,, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்றவர், சமீப காலமாக கொலை குற்றங்கள் அதிகரித்து வருகிறது, குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.