சென்னை

துபாய்க்கு கிளம்பிய விமானத்தில் திடீரென எந்திரக் கொளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்று காலை 9.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் 312 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என 326 பேருடன் புறப்பட்டது. விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி சென்றது. விமானம் ஓடுபாதைக்கு வந்தபோது விமானத்தில் திடீரென ஏந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதையொட்டி உடனடியாக விமானத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.  அக்கு வந்த் என்ஜினீயர்கள் குழு, விமானத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக எந்திரக்கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை, இது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,

எனவே 312 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு விமானன் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு வேறு விமானங்கள் மூலம் பயணிகள் துபாய் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை, விமானி சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் 326 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.