டெல்லி

யுஜிசி இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இன்று யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை படிப்பது குரித்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்/

அதில்,

“உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 5 முதல் நடைமுறைக்கு வந்தன.

யுஜிசி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயிற்றுவிக்க முடியும். ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இருவேறு பட்டம், பட்டயப்படிப்புகளை நேரடியாக படிக்க முடியும்.

இருவேறு படிப்பு வகுப்புகளும் ஒரே நேரத்தில் இல்லாதபடி, பல்கலைக்கழகங்கள் பார்த்துகொள்ள வேண்டும். ஒரு படிப்பை நேரடியாகவும் மற்றொரு படிப்பை தொலைநிலைக் கல்வி அல்லது ஆன்லைன் மூலமும் படிக்கலாம். பி.எச்டி. தவிர்த்து பிற படிப்புகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும்

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.