பெங்களூரு: ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 21வயது இளம் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையில், அவருடைய தந்தை உருண்டு புரண்டு கதறி அழும் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகனை பறிகொடுத்த தந்தை, தானும், மகனுனயே கல்லறையில் இருக்க ஆசைப்படுவதாக கூறி  இறந்த மகனின் கல்லறையில் தந்தை கதறி அழுகிறார். இது மக்களிடையே சொல்லானா துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

18ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பை தட்டிச்சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணியின் வெற்றிப் பேரணியில் பெங்களூ சின்னச்சாமி ஸ்டேடியம் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வெற்றி பேரணியை ஒரு வாரம் தள்ளி நடத்தலாம் என காவல்துறை கூறிய நிலையில், ஏற்க மறுத்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும், ஆர்சிபி நிர்வாகமும் வெற்றி பேரணியை நடத்தினர்.

இந்த வெறிறி பேரணியின் விழா நடைபெறம் ஸ்டேடியத்தில் சுமார் 3500 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த கட்டுக்கடங்காத ரசிகர்களின் கூட்டத்தைல் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியான நிலையில், 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சோக சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சோக  சம்பவத்தில் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தை  சேர்ந்த  21 வயது இளைஞர் ஒருவர் சிக்கி மரணம் அடைந்தார். பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த 11 பேரில் ஒருவரான பூமிக் லட்சுமணன்.  இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர்கள் பெரும் சோகமடைந்தனர், அதாவது,  ஐபிஎல் சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) பாராட்டு விழாவின் போது புதன்கிழமை (ஜுன் 4ந்தேதி)  நடைபெற்ற கூட்ட நெரிசலில் காயமடைந்த கிட்டத்தட்ட 50 பேரில் ஹாசனைச் சேர்ந்த 21 வயதான பூமிக் ஒருவர். விதான சவுதாவுக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட விழா, கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதால் சோகமாக மாறியது. இறந்தவர்களில் மூன்று இளைஞர்களும், 20 முதல் 35 வயதுக்குட்பட்ட பல இளைஞர்களும் அடங்குவர்.

இதையடுத்து, பூமிக் லட்சுமணனின்  உடல்  அந்த பகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்து துக்கம்  தாங்காமல் கல்லறை மீறி அவரது அப்பா  பிடி.லட்சுமணன் உருண்டு புரண்டு கதறி அழும் வீடியோ  மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூமிக் லட்சுமணனின் தந்தை பி.டி. லட்சுமணன், தனது மகனின் கல்லறையை விட்டு வெளியேற மறுத்து ஆறுதல் கூறி அழுவதை  அந்த வீடியோவில் தெரிகிறது. அப்போது. “நான் இப்போது வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. நானும் இங்கேயே இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் தரையில் படுத்து அழுதார். இதை காண்போரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. “நான் அவருக்காக (பூமிக் ) வாங்கிய நிலத்தில்தான் அவரது நினைவுச்சின்னம்  கட்டுவேன் என கூறும், லட்சுமணன் கூறுகிறார்.

கல்லறையில் அழுது புரளும் லட்சுமணன, அந்த பகுதிய கிராமவாசிகள் சூழ்ந்து, இரண்டு ஆண்கள் அவரை மெதுவாக அவரது காலடியில் தூக்க முயற்சிக்கிறார்கள். “என் மகனுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது. நான் எதிர்கொள்வது போல் எந்த தந்தையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.”

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் அரசியல் நோக்கங்களுக்காக அடிப்படை கூட்ட மேலாண்மையை புறக்கணித்ததாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பாஜஉ கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டில், “கொலைகார முதல்வர் @siddaramaiah ஐயா, கொலைகார DCM @DKShivakumar ஐயா, நீங்கள் முடிவு செய்திருந்தால், ஒரு ஆடம்பர ஹோட்டலில் உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரு கோப்பையுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் விதான சவுதாவின் படிகளில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற உங்கள் பிடிவாதத்தால் 11 குடும்பங்கள் தினமும் கண்ணீரில் கைகளை கழுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தந்தையின் மகனை, தனது மகனின் கல்லறைக்கு முன்னால் அமர்ந்து அழுவதை உங்களால் திருப்பித் தர முடியுமா?!” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மாநில அரசு அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. கூட்ட நெரிசல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் பெங்களூரு காவல்துறை ஆணையர் உட்பட ஐந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, கர்நாடக அரசு முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜை பதவி நீக்கம் செய்து, மாநில உளவுத்துறைத் தலைவரை பதவி நீக்கம் செய்தது.