திருச்சி

ட்டநுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற பழங்குடியின அரசினர் பள்ளி மாணவருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சி தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் பரத் (17 தின். தாய் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட இவரது தந்தை கொத்தனார் வேலை செய்கிறார். பரத் பச்சமலையில் தனது ஊராட்சிக்குட்பட்ட சின்னஇலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றார். கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 600க்கு 356 மார்க் பெற்று தேர்ச்சியடைந்தார்.

பரத் பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் பயின்ற போதிலும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் நாடு முழுவதும் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை சட்டம் (ஹானர்ஸ்) படிக்க மத்திய அரசு சார்பில் இளங்கலை சட்டப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை (சிஎல்ஏடி- கிளாட்) எழுதினார். கிளாட் தேர்வில் ஆல் இந்தியா அளவில் எஸ்டி பிரிவில் 968வது ரேங்க் பெற்றிருந்தார். மேலும் தமிழக அளவில் உள்ள 28 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் பயின்று கிளாட் தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் இடம் பெற்றிருந்தார்.

பரத் பெற்ற ரேங்க் அடிப்படையிலும், தமிழக அரசு பள்ளிகளில் பயின்றவருக்கு வழங்கப்படும் 7.5 சத ஒதுக்கீட்டில் திருச்சி மாவட்டம் ரங்கத்திலுள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் பி.காம். எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர்க்கை பெற்றுள்ளார். துறையூர் பகுதி பச்சமலை பழங்குடியினர் பள்ளியில் பயின்று தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கைப் பெற்ற முதல் மாணவர் பரத் என்பதையறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாராட்டு தெரிவித்துள்ளார்