சென்னை: தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,” என தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை.. வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 10ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.‘ ஜூன் 11ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜுன் 12ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 10ல் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 11ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 12ல் வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை.. இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மதுரை மாவட்டம் கள்ளந்திரி, சென்னை பாரிமுனை, அயப்பாக்கம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., சென்னை கொளத்தூர், அயனாவரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், காசிமேடு, மாதவரம், வில்லிவாக்கம், அமைந்தக்கரை, ஆட்சியர் அலுவலகம், அம்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தொண்டி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, சோலையாறு, உபாசி, சின்கோனா ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது”.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.