உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாஜக-வின் மாவட்ட பெண் நிர்வாகியான அந்த தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கள்ளக்காதலன் மற்றும் உதவியாளருடன் காரில் வைத்து தனது கண் முன்னே தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகியும் அவரது கள்ளக்காதலனும்

பின்னர் தனது மகளிடம் வாழ்க்கையில் முன்னேற இதெல்லாம் சகஜம் என்று அறிவுரை கூறிய பாஜக நிர்வாகியான அந்த தாய், இதுகுறித்து தந்தையிடம் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது மகளை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்த அந்த பெண், தான் குத்தகைக்கு எடுத்திருக்கும் விடுதியில் வைத்து தனது காதலன் மற்றும் உதவியாளரை விட்டு அந்தச் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், ஆக்ரா, விருந்தாவன் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று மார்ச் மாதம் வரை சுமார் 8 முறை இதுபோன்ற வன்புணர்வு நிகழ்ந்ததை அடுத்து இதனை பொறுக்க முடியாத அந்த சிறுமி தனது தந்தையிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அவர்கள் நடத்திய விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனையில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு அவரது வாழ்க்கை சீரழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் மற்றும் அவரது 33வயது கள்ளக்காதலன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அந்தப் பெண்ணின் உதவியாளரை (வயது 31) தேடி வருகின்றனர்.