கோவை

வெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதகா நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம்,

“பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மகாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை.

தேனி விவசாய தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் இழப்பீடும் வழங்க வேண்டும்.. ஈரோட்டில் 19 கொலையில் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் சொல்லியிருக்கிறார்கள் அப்போது அந்த கொலைக்கெல்லாம் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா? காவல்துறை நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை.

 வரும் 8 ஆம் தேதி மதுரையில் அமித்ஷா காலூன்ற போகிறார்  விஜய்க்கு இந்த விழாவில் பங்கேற்க ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம். பாமக விவகாரம் தனிப்பட்ட பிரச்சனை அதில்  எல்லாரும் சமாதானமாக செல்வது நல்லதுதான், முருகபக்தர்கள் மாநாட்டில் நாங்கள் எல்லாம் குவியும் போது அது செண்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்”

எனக் கூறியுள்ளார்.