சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 14 கடலோர மாவட்டங்களில் Fish Net Initiative, தனுஷ்கோடியில் ஃபிளமிங்கோ பறவைகள் சரணாலயம் திறந்து வைத்தார்.

இன்று உலக சுற்றுசூழல் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பேணிக் காக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் நடக்கும் உலக சுற்றுச்சூழல் தின விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின், கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.