சென்னை: பாமகவில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற மனக்கசப்பு மோதலாகி உள்ள நிலையில், இன்று அன்புமணி, தனது தந்தையான டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். இதையடுத்து பாமகவில் உருவான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, அக்கட்சியை நிறுவிய நிறுவனதான டாக்டர் ராமதாசுக்கும், அவரால் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டு, பாமக பொதுகுழுவால் நியமனம் செய்யப்பட்ட, அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் கடந்த பொதுக்குழுவில் வெட்டவெளிச்சமானது. தொண்டர்கள் முன்னிலையிலேயே தந்தை, மகன் மோதிக்கொண்டது பேசும்பொருளாக மாறியது.
இதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளை இருவரும் மாறி மாறி நீக்குவதும், பின்னர் நியமிப்பதும் தொடர்ந்து வந்த நிலையில், அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அவர் இன் செயல் தலைவர் என்றால். ஆனால், அன்புமணி அதை ஏற்க மறுத்துவிட்டு, நானே தலைவர் என்றார். இதையடுத்து, பாமகவின் சில நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதற்கிடையில், அன்புமணி தனது சொல்லை கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என்றும், தாயாரை அடிக்க பாய்ந்தார் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எனது காலை பிடித்து கெஞ்சினார் அன்றும் ராமதாஸ் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அன்புமணிக்கு வன்னியர் சங்கம் முழு ஆதரவு அளிப்பதாக கூறியது. அன்புமணி ராமதாஸ் கூறுவதை கேட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இடையில் அன்புமணி தனது பனையூர் இல்லத்தில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, சில நாட்களுக்கு முன்னர் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியும் பாமகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு வரும் வியாழக்கிழமை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ராமதாஸ் மகள்கள் காந்தி, கவிதா உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை ராமதாஸ் வசித்து வரும், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்பட சில முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த 45 நிமிட சந்திப்பின் மூலம் தந்தை மகன் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.