சென்னை

மிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் 139 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர்.

மகளிர் நலனுக்காக தமிழக அரசு, பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா்.

அரசால் சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

”சென்னை, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை 139 கோடி பெண்கள் பயணித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் 3.74 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது 2024-ம் ஆண்டு மே மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளை விட 21 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 12.06 லட்சம் பெண்கள் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்”.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.