குவைத்
குவைத் நாட்டில் சிக்கி உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
“என் பெயர் அப்துல் ரகுமான். நான் குவைத்திற்கு ஓட்டுநர் வேலைக்காக வந்தேன். நான் வேறு இடத்திற்கு விசா எடுத்தேன். ஆனால், என் Sபான்சர் என்னை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்து விட்டார். நான் தற்போது வேலை செய்து வரும் வீட்டில் சரியான சாப்பாடு, ரூம் வசதி இல்லை. அதிகமாக வேலை வாங்குகிறார்கள். எதாவது எதிர்த்து கேட்டால் என்னை அடிக்க வருகிறார்கள். ஓவரா பேசுகிறார்கள். நான் ஊருக்கு கிளம்புகிறேன் எனக் கூறினால் ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என தெரிவிக்கிறார்கள்.
என்னை அறையில் வைத்து டார்ச்சர் செய்கிறார்கள். என்னுடைய பாஸ்போர்ட், சிவில் ஐடியை பிடிங்கி வைத்துக்கொண்டு குவைத்தை விட்டு உயிரோடு போக முடியாது என மிரட்டுகிறார்கள். நான் இதுகுறித்து இந்தியன் எம்பஸியில் புகார் அளித்ததற்கு என் மேல் புகார் வந்ததாகவும், நான் சிறைக்கு செல்ல போவதாகவும் பயமுறுத்துகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன். நான் ஏன் தவறு சிறைக்கு செல்ல வேண்டும். என்னுடைய பாஸ்போர்ட், சிவில் ஐடியை பிடிங்கி வைத்துக்கொண்டு வெளியில் அடித்து துரத்தினால் நான் எங்கு செல்ல முடியும்.
சிறைக்கு சென்றால் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நான் சிறைக்கு செல்லக்கூடாது. நான் பத்திரமாக ஊருக்கு செல்ல வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வருக்கு தெரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவை போடுகிறேன். இதனை அதிகமாக பகிர்ந்து என்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்றுங்கள்”
எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.