சென்னை; சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்றுமுதல்  வழக்கமான பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பது போல உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படி, நடப்பாண்டு,  தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது.

இந்த விடுமுறையானது மே 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதிவரை  என அறிவிக்கப்பட்டது. மேலும், கோடை விடுமுறை காலத்தில் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் நடைபெற்று வந்த நிலையில், விடுமுறை கால நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வந்தன. மேலும்,  அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில்,  கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.