வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இமயமலையில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பங்களாதேஷ் நாட்டின் பாசன பகுதிகளை சென்றடையும் பிரம்மபுத்திரா நதிக் கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாநில முதல்வர்களுடன் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.