மதுரை
திமுகவில் மெலும் 2 அணிகள் உருவாக்கப்பட உள்ளதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில், திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசி வருகின்றனர். கூட்ட இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இந்த பொதுக்குழுவில் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், திமுக பொதுக்குழு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திமுகவில் அமைப்பு ரீதியாக மாற்றுத்திறனாளிகள் அணி மற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.