சென்னை: பாமகவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று பொருளாளர் திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி, பாமக பொருளாளராக திலகபாமாவே தொடர்வார் அறிவித்து உள்ளார். இதனால் பாமகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் மற்றும் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பொதுவெளியில் மீண்டும் பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருக்கிறார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார். மேலும் நேற்றைய (மே 29ந்தேதி) அன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வீசியதுடன், தேர்தல் கூட்டணியில் தனது சொல்லை கேட்கவில்லை என்றும், நிர்வாகிகள் நியமனத்திலும் பிரச்சினை என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, முகுந்தர் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, இன்று அன்புமணி தனது பனையூர் அலுவலகத்தில் பாமகவினரை சந்தித்து பேசுவதாக அறிவித்தார். இதையடுத்து, பாமக நிர்வாகிகள் ஏராளமானோர் பனையூரில் குவிந்துள்ளனர்.ஹ
இந்த நிலையில், அன்புமணியின் ஆதரவாளர்கள் சிலரை நீக்குவதாக இன்று (மே 30ந்தேதி) காலை டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, இதற்கிடையே, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவக்குமாரை நீக்கியும் புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்தும் பா.ம.க. தலைவர் என குறிப்பிட்டு ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் பா.ம.க. பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை நீக்கியதாகவும் அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசைன் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவித்துள்ள அன்புமணி, பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் திலகபாமாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குப்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமதாஸ்- அன்புமணி இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பா.ம.க. இரண்டாக உடைந்தது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார். மறுநாள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்ட, தங்களுக்கு இடையில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினாலும், கட்சியை யார் வழிநடத்தப் போகிறர்கள் என்ற விவாதம் இருந்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில், தந்தை மகனுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது.
இன்று காலை முதல் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 23 மாவட்ட நிர்வாகிகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, இதற்கு முன்பாக கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்கினார். உறுப்பினர் அட்டையில் பா.ம.க. பொருளாளர் என்ற இடத்தில் திலகபாமா கையெழுத்திட்டு உள்ளார். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பா.ம.க. செயல்தலைவர் அன்புமணி என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், இன்று நிர்வாகிகளுடனா ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.வின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என அன்புமணி ராமதாஸ் பேசினார். மேலும் அவர் கூறுகையில், *பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன். பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான் என்று கூறியவர், தொண்டர்கள் இல்லை என்றால் பட்டாளி மக்கள் கட்சி இல்லை என்பதை உணர வேண்டும்.
சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது இங்கு உள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு சந்திப்பு ஒன்று விரைவில் நடைபெறும் என்றார்.