சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

குரோம்பேட்டை அரசு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் 15-வது ஊதிய ஒப்பந்தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மே 29ந்தேதி அன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையுடன் உடன்பாடு எட்டி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை செயலாளர் பணிந்த ரெட்டி, சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் கார்மேகம், 8 போக்குவரத்து கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதுபோல போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்களான  சிஐடியு, தொமுச, எஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 85 தொழிற்சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 இந்த பேச்சுவார்த்தையில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடி பண பலன்ங்கள் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள டி.ஏ தொகைகள் வழங்க வேண்டும், தற்காலிக ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க கூடாது, பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏற்கனவே. முன்னதாக, சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து தொழிசங்கங்களின் 15-வது ஊதிய உயர்வு முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த2 2024ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது  15-வது ஊதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையில், சில வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அது இதுவரை நிறைவேற்றப்படாத  நிலையில், அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது,

போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில் 64 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவர்.

மேலும்,  ஊழியர்களுக்கு வழங்கப்பட  வேண்டிய நிலுவைத் தொகை 4 தவணையாக வழங்கப்படும்.

2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.2,894.23 கோடி பணப்பலன்கள் வழங்கியுள்ளோம். பணியில் இறந்த பணியாளர்களின் 1,016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளோம்.

இவ்வாறு கூறினார்.