மும்பை

காராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்

தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வீடு அமைந்து உள்ளது. அந்த வீட்டுக்கு வெளியே சோலாப்பூரை சேர்ந்த அஜித் மைதகி (வயது 39) என்ற நபர் இன்று திடீரென வந்து தீக்குளிக்க முயன்றார்.

இதையொட்டி அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை போலிசார் பெட்ரோல் கேனுடன் வந்த அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டு மலபார் ஹில் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.  அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

அஜீத்துக்கு மாநில தலைமையகத்தில் வேலை ஒன்று முழுமையடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளதால், அவர் தொடர்ந்து வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவருக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர்.  மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.