சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்.
”தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிள் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் வெள்ளி, இன்று மற்றும் நாளை உள்ளிட்ட இரண்டு நாட்களுக்கு மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் ”
என எச்சரித்துள்ளது.