சென்னை
தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் தங்க நகை கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம்
இதுவரை தமிழகசட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது, இன்று, அவற்றின் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பொருந்தாது.
ஏனெனில் கூட்டுறவு கடன் சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கீழ் வரவில்லை. இந்த விதிகள் தேவையில்லாதது. இதனை மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கிக்கு முறையாக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்”
எனத் தெரிவித்துள்ளார்.