அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா.

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வெளியாக ஆரம்பித்த அறிவிப்புகள் இன்று வரை ஓய்ந்தபாடில்லை.

சமூக வலைத்தளங்களில் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தால், அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி நிறுத்தி வைக்குமாறு உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு நேற்று முன் தான் உத்தரவு பறந்தது.

இப்போது அடுத்த அதிரடி.

சமூக வலைத்தளங்கள் அமெரிக்கர்களை பிளாக் செய்யும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவுக்கு தற்போது ட்ரம்ப் நிர்வாகம் வந்துள்ளது.
கடந்த வாரம் பிரேசில் நாட்டு நீதிபதி அலெக்சாண்டரா மொரான்,  X தளமும் ட்ரம்ப் நிர்வாகமும் சேர்ந்து கொண்டு தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அவரை மனதில் வைத்துக் கொண்டுதான், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரோபியோ இப்படி ஒரு புது விசா கொள்கையை வகுப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

ட்ரம்ப் வகையறாவின் அதிரடி என்னவாக இருக்குமோ தெரியவில்லை.

இன்னொரு பக்கம், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இப்போதைக்கு உலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்கிறார்கள்.

அமெரிக்காவின் கடன் என்பது எகிறிக் கொண்டிருப்பதால் அந்த நாடு பொருளாதார ரீதியாக பேராபத்தில் சிக்க உள்ளது என்பதே அவர்களின் கூற்றாக உள்ளது.

2024 ஆண்டு விவரப்படி அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 30 ட்ரில்லியன் டாலர்.

ஆனால் மொத்த கடன் 33 ட்ரில்லியன் டாலர்.

அடுத்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த கடன் விகிதம் 128% சதவீதத்தில் போய் முடியும் என்கிறார்கள்.

இதனால்தான் ஆப்பிள் போன் போன்ற அமெரிக்க ஜாம்பவான் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வெளிநாடுகளில் முதலீடு செய்து தொழிற்சாலை ஆரம்பித்து பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தால் தாறுமாறாக வரிவிதிப்போம் என்கிறார் ட்ரம்ப் என்கிற பேச்சை ஒதுக்குவதற்கில்லை.

– செய்திப் பிரிவு