நாய்கடி, நாலு மாத சிறை.

அஜித் அப்பார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் வசித்து வருபவர் ரமிக் ஷா. வீட்டிலிருந்து தரை தளத்திற்கு வருவதற்காக தனது ஒன்றை வயது மகன் மற்றும் வேலைக்காரருடன் லிப்ட்டில் ஏறியுள்ளார்.

மூன்றாவது தளத்திற்கு வந்து லிப்ட் நின்றபோது ரிஷப் பட்டேல் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் லிப்டில் ஏற முயன்றார்.

நாயைப் பார்த்ததும் ஒன்றரை வயது குழந்தை ஏகத்துக்கும் மிரண்டு போய் அழ ஆரம்பித்து இருக்கிறான்.

நாயைப் பார்த்தால் குழந்தைக்கு பயம் என்பதால் தாங்கள் போன பிறகு பின்னால் வரும்படி ரமிக் ஷா கூறியிருக்கிறார்.

இல்லையென்றால் தாங்கள் லிப்டில் இருந்து இறங்கி விடுவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

ஆனால் வளர்ப்பு நாயுடன் வந்திருந்த ரிஷப் பட்டேல் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் வலுக்கட்டாயமாக லிப்ட்டில் நுழைந்திருக்கிறார்.

அதைவிட தனது வளர்ப்பு நாயையே அவ்வளவு கொடூரமாக லிப்டுக்குள் வேகமாக இழுத்துள்ளார்.

இந்த வெறியில் லிப்ட் நகரும்போதே அந்த நாய் குழந்தையோடு நின்று இருந்த ரமிக் ஷா மீது பாய்ந்து கையை கடித்து விட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரமிக் ஷா போலீசில் புகார் செய்ய அது வழக்காக பதிவாகி நீதிமன்றத்திற்கு சென்றது.

ஆரம்பத்தில் லிப்டில் நாயை ஏற்ற எதிர்ப்பு தெரிவித்ததால்,ரிஷப் பட்டேல் திட்டமிட்டு அவரது வளர்ப்பு நாயை நாயை தன் மேல் ஏவி கடிக்க விட்டதாக ரமிக் ஷா குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக சிசிடிவி ஃபுட்டேஜ்களை நீதிமன்றம் ஆராய்ந்த போது, வளர்ப்பு நாயை மிகவும் அஜாக்கிரதையாக கையாண்டது தான் எல்லாவற்றிற்கும் காரணம் என தெரிய வந்தது.
வளர்ப்பு நாயிடம் கூட கொடூரமாக நடந்து கொண்ட ரிஷப் பட்டேல் மீது கருணை காட்ட முடியாது என்று கூறி அவருக்கு நான்கு மாத கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி சுகாஷ் புலே தற்போது தீர்ப்பளித்துள்ளார்.

மும்பை வோர்லி பகுதியில் நடந்திருக்கும் இந்த இந்த சம்பவம் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

– செய்தி பிரிவு