ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டு வருகின்றனர்.

இதனால் காசாவில் சிக்கியுள்ள 20 லட்சம் பாலஸ்தீனியர்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.