ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சமீபத்திய மிஷன் தோல்வியில் முடிந்தது.

தெற்கு டெக்சாஸில் உள்ள மஸ்க்கின் புதிய நகரமான ஸ்டார்பேசில் இருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் புறப்பட்ட சில மணி நேரத்தில் வெடித்துச் சிதறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய சோதனை விமானங்களில் இருந்ததை விட இந்த ஸ்டார்ஷிப் அதிக தூரம் பயணித்தது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள், அது கட்டுப்பாட்டை இழந்து எரிபொருளை இழக்கத் தொடங்கியது.

“செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமி” (Occupy Mars) என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த ஏவுதலை நேரடியாகப் பார்த்தார்.

செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்துவதற்கான மஸ்க்கின் திட்டமாக பார்க்கப்பட்ட இந்த ஸ்டார்ஷிப் திடீரென வெடித்துச் சிதறியதை அடுத்து “வாழ்க்கையை பல கிரகங்களுக்கு மாற்றும்” தனது லட்சியம் குறித்த திட்டமிடப்பட்ட உரையை ரத்து செய்து விட்டு மஸ்க் வெளியேறினார்.

பூமி அழிக்கப்பட்டால் அல்லது வாழத் தகுதியற்றதாக மாறினால், மற்ற கிரகங்களை காலனித்துவப்படுத்தும் தனது திட்டங்களை “கூட்டாக வாழ்க்கைக்கான ஆயுள் காப்பீடு” என்று மஸ்க் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.