பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த உயர்மட்டக் கூட்டம் காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் விரைவாக மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகளுக்கு மத்தியில் முக்கியமான கொள்கை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் பயங்கரவாதத்தை இந்தியா வேரறுக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பொருளாதார மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் தற்போதைய பாதுகாப்பு சவால்களையும் மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் மே 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய குறைக்கடத்தி மிஷன் (ISM) இன் கீழ் உ.பி. மாநிலத்தில் ஆறாவது குறைக்கடத்தி அலகு நிறுவுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.