லிப்ட்டில் சிக்கிய மகன். ஷாக்கில் இறந்த தந்தை….

ரிஷி ராஜ். 51 வயதான தொழிலதிபருக்கு ஆசிரியை மனைவி. பதினாறு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள்.
அபார்ட்மெண்டில் வசித்து வந்த ரிஷி ராஜ் நேற்று முன்தினம் காலை வாக்கிங்கிற்காக கீழ்தளத்திற்கு வந்துள்ளார்.
அப்போது வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு மாணவனான தனது இரண்டாவது மகனை வீட்டுக்குப் போகச் சொல்லும்படி சொல்லி இருக்கிறார்.
மகன் தேவநேஷும் அப்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாமல் மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல உடனே லிப்டில் ஏறி இருக்கிறான்.
சில வினாடிகளில் மின்சாரம் கட் ஆகிய லிப்ட் அப்படியே நின்றுவிட்டது. பதறிப்போன தந்தை உடனே செக்யூரிட்டி ரூமுக்கு ஓடி ஜெனரேட்டரை ஆன் பண்ண சொல்லி இருக்கிறார்.
மகன் லிப்டில் சிக்கிக் கொண்டு தவிப்பதை பொறுக்க முடியாமல் மிகுந்த பதபதைப்புடன் லிப்ட் சாவியை எடுக்க 40-50 அடிகள் தூரம் ஓடி இருக்கிறார்.
அதற்குள் ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டு லிப்ட் இயங்க ஆரம்பித்து விட்டது.
லிப்டில் இருந்து மகன் தேவனேஷ், பத்திரமாக வெளியே வந்து விட்டான்.
ஆனால் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பதட்டத்தில் ரிஷிராஜுக்குத்தான் நெஞ்சுவலி வந்து அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லிப்ட்டில் சிக்கிய மகன் உயிரோடு வந்து விட்டான். ஆனால் அவனைக் காப்பாற்ற போராடிய தந்தை உயிரிழந்துவிட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்துள்ளது இந்த பரிதாபகரமான சம்பவம்.
– செய்தி பிரிவு