டெல்லி
மத்திய அரசு 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது,

தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அதிக சக்திவாய்ந்த போர் விமானமாக உள்ள்ச் ரபேல் விமானத்தை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. ரபேல் போர் விமானம் 4 ம் தலைமுறையை சேர்ந்தது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்துள்ளன. ,ஏலும் துருக்கி 5-ம் தலைமுறை விமானத்தை தயாரித்து சோதனை மேற்கொண்டு வருகிறது.
எனவே இந்தியாவும் 5 ஆம் தலைமுறை விமானத்தை ஏஎம்சிஏ திட்டம் மூலம் தயாரிக்க முடிவு செய்தது இந்த 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5-ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5-ம் தலைமுறை போர் விமானம், 2035-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.