சென்னை

த்தரப்பீரதேச மாநிலம் லக்னோவுக்கு செல்லும் விமானம் சென்னைக்கு திரும்பி உள்ளது/

இன்று காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் 160 பயணிகள் பயணித்தனர்.

இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இது குறித்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விமானி உடனடியாக விமானத்தை சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கினார். இன்று காலை 6.30 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட பயணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிறகு காலை 7.20 மணிக்கு விமானம் மீண்டும் லக்னோ புறப்பட்டு சென்றது. அவசரகாலத்தில் உடனடியாக சென்னைக்கு விமானத்தை திருப்பிய விமானியை அனைவரும் பாராட்டி உள்ளனர்