தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார். அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான், அவர்களைக்கொண்டு எல்லைப்பகுதியில் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமான, காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதிக்கு வந்த சுற்றுலா பணிகளை பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். குறிப்பாக ஆண்களிடம், நீ இந்துவா என கேட்டு கேட்டு சுட்டுக்கொன்றனர். இந்து இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தும், பாகிஸ்தான் விமான தனங்களையும் தாக்கி பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைவர் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்தியா ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. மேலும் இந்தியாவின் ராணுவ தாக்குதல் மட்டுமின்றி பொருளாதார தாக்குதலையும் தாக்குபிடிக்க முடியாத பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு மக்களின் வெறுப்புக்கும் ஆளாகி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்திய ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார், தனது ஈரான் பயணத்தின்போது, காஷ்மீர் விவகாரம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தெஹ்ரானில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனைத்து சர்ச்சைகளை யும் தீர்க்க விரும்புகிறேன் என்றவர்ல, ஈரானில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கூறினார்.
காஷ்மீர், பயங்கரவாதம், நீர் பகிர்வு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பம் தெரிவித்தார். மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆனால், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது “பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. பயங்கரவாதமும் வர்த்தகமும் நடக்காது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரைப் பற்றியது மட்டுமே என்பதை சர்வதேச சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வந்ததற்கு வெளிப்படையான பதிலடியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருதரப்பு விஷயமாகவே இருக்க வேண்டும், எந்த மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர், இந்தியா போர் பாதையைத் தேர்ந்தெடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்தார். “ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்கத் தேர்வுசெய்தால், சில நாட்களுக்கு முன்பு செய்தது போல் எங்கள் பிரதேசத்தைப் பாதுகாப்போம்,” என்று அவர் கூறினார்.
“ஆனால் அவர்கள் எனது அமைதி வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை தீவிரமாகவும் உண்மையாகவும் காட்டுவோம்”.
மே 10 அன்று, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக இந்தியாவை அணுகியது. இராணுவ மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளும் விரோதங்களை நிறுத்த ஒரு புரிதலை எட்டின.
பாகிஸ்தான் பிரதமர் இந்தளவுக்கு இறங்கி வர காரணம், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் கொடுத்த மரண அடி என்பதை யாரும் மறுக்க முடியாது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை எடுத்தது.
அணுசக்தி நாடான பாகிஸ்தானின் 11 விமானப்படைத் தளங்களை ஒரே நேரத்தில் தாக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. முக்கியமாகப் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் அருகில் உள்ள 100 போலாரி விமானத் தளம் முழுவதுமாக தாக்கி அழிக்கப் பட்டது. மொத்தத்தில் பாகிஸ்தான் விமானப்படை உள்கட்டமைப்பில் 20 சதவீதம் முற்றிலுமாக அழிக்கப் பட்டன.
நான்கு நாட்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான்,போரை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தியது.
இதற்கிடையே இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் உட்பட 8 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தாக்கியதாகவும் பாகிஸ்தான் கூறியது. இவையெல்லாம் பாகிஸ்தானின் வழக்கமான பொய் பிரச்சாரம் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் விமானப்படை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானதாக Open Source Intelligence மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய போர் விமானங்களான எட்டு F-16 ரக விமானங்களும், 4 JF-17 ரக விமானங்களும் முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளன. இவை பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் நவீன ரக விமானங்கள் என்பதால், இந்த இழப்பு அந்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானுக்கு சுமார் 3.36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ஒரு F-16 பிளாக் 52D போர் விமானத்தின் விலை 87.38 மில்லியன் டாலராகும். மொத்தம் 4 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. விமான தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த போது நான்கு F-16 பிளாக் 52D விமானங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இதனால் மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு Saab 2000 Erieye Airborne Early Warning and Control அமைப்பும்,35 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமும் அழிக்கப் பட்டுள்ளன. AWACS விமானங்கள் மற்றும் முக்கிய செயல்பாட்டு உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டிருப்பது, பெரிய அளவிலான வான்வழி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பாகிஸ்தானின் திறனுக்கு விழுந்த பெரிய பின்னடைவு ஆகும்.
40 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு C-130H ஹெர்குலஸ் போக்குவரத்து விமானமும், 200 மில்லியன் டாலர் மதிப்புடைய அதிநவீன HQ-9 தரையிலிருந்து வான் ஏவுகணை (SAM) பேட்டரியும் தகர்க்கப் பட்டுள்ளன. 10 மில்லியன் டாலர் மதிப்புடைய இரண்டு மொபைல் கட்டளை மையங்களும் அழிக்கப் பட்டுள்ளன.
இந்த தரை அடிப்படையிலான இழப்புகள் மட்டும் மொத்தம் 599.52 மில்லியன் டாலர் ஆகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால்,ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் கரியாகியுள்ளது.

செயற்கைக்கோள் படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்கள், விமானப் போக்குவரத்துத் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பொது ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம், பாகிஸ்தானின் நஷ்டம் கணக்கிடப் பட்டுள்ளன. இந்த பன்முக ஆதாரங்கள், பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன.
இந்த பெரும் இழப்புகள், பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் அதன் எதிர்கால போர் திறன்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. பயங்கரவாதத்தையும் ,பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணையும் ஒட்டு மொத்தமாக அழிக்கும் ராஜ தந்திர நடவடிக்கையாகும்.
அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை ஆப்ரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு பிறகே பாகிஸ்தான், அமைதியை விரும்புவதாக கதறிக்கொண்டிருக்கிறது.