சென்னை
தமிழக பள்ளி கல்வித்துறை ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது

தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி கோடை விடுமுறைக்குப்பின், ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவித்துள்ளதால் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படுகின்றன.
இன்னும் ஒரே வாரத்தில் பள்ளி திறப்பதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும் மாணவ- – மாணவியர் தங்களது பெற்றோருடன் வந்து தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் ஆகியவை புக் கடைகளிலும், பேக் கடைகளிலும் ஸ்டேஸ்டனரி கடைகளிலும் வாங்கி செல்கின்றனர்.
பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை,
* பள்ளிகள் திறக்கப்படும் அன்று முழுமையாக மாணவர்கள் பள்ளியை பயன்படுத்தும் வகையில் சுத்தப்படுத்தி தயார் செய்ய வேண்டும்.
* மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
* காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு தரமாக தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
*செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.
என ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.