கோண்டா

பாஜக ஆளும் உபி மாநிலத்தில் கட்சி அலுவல்கத்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்ட தலைவர் உல்லாசமாக இருந்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட பா.ஜ.க. தலைவர் அமிர் கிஷோர் கஷ்யப் கடந்த மாதம் 12 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்து  கட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியரை வெளியே அனுப்பினார்., கிஷோரின் காரில் இருந்து அப்போது ஒரு பெண் வேகமாக பா.ஜ.க. அலுவலகத்திற்குள் சென்றார்.

கிஷோர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்குள் சென்று., அலுவலகத்திலுள்ள படிக்கட்டு அருகே வைத்து அந்த பெண்ணும், கிஷோரும் கட்டிப்பிடித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது . இது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலானது

இது குறித்து கிஷோர்,

“அந்த பெண் பா.ஜ.க. தொண்டர் ஆவார். அவர் தக்குனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஓய்வு எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.ஆகவே நாம், அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தேன். அலுவலகத்தில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது அந்த பெண்ணுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவருக்கு ஆதரவாக அவரின் கையை நான் பிடித்தேன். அவரும் என் கையை பிடித்துக்கொண்டார். என் மீது அவதூறு பரப்ப இந்த வீடியோ தவறாக பரப்பப்படுகிறது’

என்று தெரிவித்துள்ளார்ர்.