சென்னை: தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக,  கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறவும் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்,  சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தகர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது.  அமாவாசை மற்றும் கிருத்திகையையொடிடி, மக்கள் தரிசனத்தக்கு மலையேறி செல்வார்கள் என்பதால்,  இரண்டு நாட்கள்  பக்தர்கள் மலையேறி செல்ல  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வளது.  மேலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மட்டுமல்லாமல், சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல  பக்தர்களின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.

இந்த நிலையில்,  வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.