சேலம்

மிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது,

சென்ற மாதம் சென்னையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மிரட்டல் வந்தபோது சோதனை செய்யப்பட்டு அது போலியான மிரட்டல் எனக் கண்டறியப்பட்டது.

தற்போது சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி உள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.