சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் பிளே ஆப் சுற்றில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஜூன் 3ந்தேதி அன்று அகமதாபாத் மைதானத்தில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்காக இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2025 கோப்பையை கைப்பற்றும்.

ஐபிஎல் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, தற்போது ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் பிளேஆஃப்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, மே 21 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் களத்தில் உள்ளன. கோப்பையை தட்டிச்செல்ல ஆர்சிபி, மும்பை அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
18-ஆவது ஐபிஎல் தொடர் மாா்ச் 22 அன்று கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதைத்தொடர்ந்து பரபரப்பாக தொடர்ந்து லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தோனி தமையிலான சிஎஸ்கே அணி தீவிரமாக ஆடி, இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்துக்கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி பெரும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தார். இதனால், ரசிகர்களிடையே சிஎஸ்கே போட்டிகளை காணும் ஆர்வம் குறைந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டி கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளன.. தற்போது, ஐபிஎல் 2025 சீசன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்தால் இறுதிப்போட்டி செல்ல கூடுதல் வாய்ப்புகள் இருப்பதால் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.
தற்போதைய நிலையில், ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பெற்றுள்ள அணிகள் விவரம்:
13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் (+0.602) பெற்று குஜராத் முதலிடத்தில் உள்ளது.
12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (+0.482) பெற்று பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது.
12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (+0.389) பெற்று பஞ்சாப் மூன்றாம் இடத்தில் உள்ளது.
13 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் (+1.292) பெற்று மும்பை நான்காம் இடத்தில் உள்ளது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 21 புள்ளிகளை எட்டி முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

பிளே ஆஃபில், குஜராத், மும்பை அணிகளுக்கு தலா ஒரு லீக் போட்டியும், பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு தலா இரண்டு லீக் போட்டிகளும் உள்ளன. இதில் லக்னோ விடம் தோல்வியடைந்ததால் குஜராத் அணியின் முதல் இரண்டு இடம் பிடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் குஜராத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே உள்ளது. அந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் நிலையில் உள்ளது. இந்த கடைசிப போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் 20 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சென்னையிடம் தோல்வியடைந்தால் 18 புள்ளிகளுடனேயே இருக்கும்
அதுபோல, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே இரண்டு போட்டிகள் உள்ளன. அதனால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அந்த அணிகள் 21 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும். அப்படி ஒரு நிலை வந்தால், குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோய் விடும். பின்னர் இந்த இரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடத்தப்பட்டு கோப்பையை பெறுபவர் யார் என்பது தெரிய வரும்.

லீக் கட்டத்தின் முடிவில் முதல் இரண்டு அணிகள் குவாலிஃபையர் 1 இல் மோதும், வெற்றியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்வார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்த அணிகள் எலிமினேட்டரில் மோதும், தோல்வியடைந்த அணி நாக் அவுட் ஆகும்.
குவாலிஃபையர் 1 இல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியும் குவாலிஃபையர் 2 இல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும், அங்கு குவாலிஃபையர் 1 மற்றும் 2 இன் வெற்றியாளர்கள் நேருக்கு நேர் மோதுவார்கள்.
இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபி இடையே கடைசி போட்டியாக ஒரு லீக் போட்டி மட்டுமே உள்ளது. இந்த போட்டியில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தினால் மட்டுமே 18 புள்ளிகளைப் பெற முடியும் என நிலை உள்ளது.
அதனால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. 3வது மற்றும் 4வது இடங்கள் பிடிப்பதில் குஜராத் மற்றும் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் தங்கள் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும். அதே வேளையில் இரண்டிலும் தோல்வி அடைந்தால் 17 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் 4ம் இடங்களை பிடிக்கும். அதனால் முதல் இரு இடங்களை பிடிக்கப்போவது யார், அவர்களில் கோப்பையை தட்டிச்செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிளேஆஃப் போட்டியின் முதல்போட்டி, மற்றும் இரண்டாவது போட்டிகள் மே 29ந்தேதி அன்று சண்டிகரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
அடுத்த போட்டியானது மே 30ந்தேதி அதே சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 3வது மற்றும் 4வது போட்டிகள் நடைபெறும். இதில் தோல்வி பெறும் அணி எலிமினேட் செய்யப்படும்.
இதையடுத்து, ஜன் 1ந்தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குவாலிபையருக்கும் எலிமினேட்டருக்கும் இடையே போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜூன் 3ந்தேதி அன்று மீண்டும் அகமதாபாத்மைதானத்தில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்காக இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2025 கோப்பை பெறும்.