சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல் ஒருவனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கத்தி வெட்டு சம்பவம் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அரங்கேறி உள்ளது. இந்த கொலை முயற்சி சம்பவம், போதை பொருள் தொடர்பாக ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்து பொந்துகள் மட்டுமின்றி மக்கள் கூடும் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. மேலம் பெட்டிக்கடைகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களும் தாராளமான விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்கள், போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலால் தாக்கப்படும், எச்சரிக்கப்படும் தொடர்வதால், அதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை ஒரு கும்பல் 11ம் வகுப்பு மாணவனை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக மாணவரை வெட்டினர். மொத்தம் 10 இடங்களில் அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கத்தி வெட்டு வாங்கிய மாணவன், கோடை விடுமுறை என்பதால் சென்னை சைதாப்பேட்டையில் வீடு, வீடாகஒருவர் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருவதும், அவ்வப்போது நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி திரிவதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் அம்மாணவர் தண்ணீர் கேனை இறக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போது மர்ம கும்பல் அங்கு வந்து அவனை சரமாரியாக வெட்டி உள்ளது. இந்த சம்பவத்துக்கு போதை பொருள், பெண் அல்லது காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.