சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக நேற்று இரவு அல்லது, இன்று நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் சந்திக்க நேரம் ஒதுக்க கோரப்பட்ட நிலையில், இன்று மாலை பிரதமரை சந்திக்கசந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

10நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.24) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை இதுவரை புறக்கணித்த தமிழ்நாடு அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு முதன்முறையாக கலந்துகொண்டுள்ளார்.
இது குறித்து கடந்தாண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்திற்காக வெள்ளை கொடி பிடித்து டெல்லி செல்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த டெல்லி செல்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை (மே.23) காலை டெல்லி புறப்பட்ட அவர் மதியம் டெல்லி சென்றடைந்தார். தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இதற்கிடையில், டெல்லியில் பிரதமரை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. அதன்படி நேற்று இரவு (மே 23ந்தேதி) அல்லது, இன்று நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் போது இடைவேளை நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4.10 மணியளவில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, முதல்வர் ஸ்டாலின். இன்று இரவே தமிழகம் திரும்புகிறார்.