சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் CMDA முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் அரசு அதிகாரிகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் 1983ல் 17 சென்ட் இடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலம் உபயோகப்படுத்தபடாமல் உள்ளது. அதாது, 1983ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்காக  கையகப்படுத்தப்பட்ட நிலமானது இதுவரை  பயன்படுத்தப்படாமல்  இருப்பதால், அந்த  நிலத்தை திருப்பித்தரக் கோரி, நிலத்தை வழங்கியவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து முடிவெடுக்க  சிஎம்டிஏவுக்கு காலக்கெடு விதித்தது. அப்போது சிஎம்டிஏ தலைவராக அதுல்மிஸ்ரா ஐஏஎஸ் இருந்து வந்தார். அவர், இந்த விவகாரத்தில் முறையான முடிவு எடுக்காத நிலையில்,  இதுகுறித்த பலமுறை நினைவூட்டியும் அவர்கள் முடிவு எடுக்கவில்லை என்று கூறப்பட்டத. இதனால், அதற்கான கெடு முடிந்ததும், நிலத்தை வழங்கியவர்கள் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதாவது,  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலத்தை திருப்பி ஒப்படைப்பது பற்றி முடிவெடுப்பது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு என பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதை கண்டித்துடன்,  அப்போதைய CMDA முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து  உத்தரவிட்டது. மேலும்,  பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டை  3 வாரங்களில்  வழங்காவிட்டால் அன்சுல் மிஸ்ரா மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கடுமையாக கூறியது.

அத்துடன்,  அரசு அதிகாரிகள் கடமை செய்யாததால் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை பல வழக்குகளில் உள்ளது. அரசு அதிகாரிகள் உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.