சென்னை: இன்றும், நாளையும், சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை மக்களின் வரவேற்பை பெற்ற மின்சார ரயில் சேவையில், அவ்வப்போது பராமரிப்பு பணி காரணமாக சில சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும், வழக்கம்போல மீண்டும் செயல்படுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறத.

அதன்படி, இன்றும், நாளையும் சில வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 21 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24, 26 தேதிகளில் மொத்தமாக 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே மற்றும் சென்னை கடற்கரை – எண்ணூர் இடையே மொத்தமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கண்ட இரு நாள்கள் பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே மற்றும் சென்னை கடற்கரை – எண்ணூர் இடையே மொத்தமாக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.