AI மூலம் ஆபாசமாய் மார்பிங்.

மணிப்பூர் மாநிலத்திலிருந்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் வேலை பார்த்து வந்தார் 28 வயது பெண் ஒருவர்.

திடீரென இவருக்கு சமீபமாய் இவரை ஆபாசமாக சித்தரித்து ஏகப்பட்ட போட்டோக்களு வீடியோக்களும் வந்த வண்ணம் இருந்தன.

அத்தனையும் ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் வருவதைப் பார்த்து அதிர்ந்து போனார் இளம் பெண்.

போலீசாரிடம் புகார் எடுத்துக் கொண்டு போனபோது தொடர்ச்சியாக விசாரித்தார்கள்.

அப்போதுதான் பைக் டேக்சி டிரைவர் ஒருவருடன், பெண்ணுக்கு நட்பாகி பின்னர் பிரிந்தது பற்றி தெரிய வந்தது.

அதாவது கொஞ்சநாள் பழகி விட்டு அந்த பெண்ணை இளைஞர் விரட்டி அடித்திருக்கிறார்.

மீண்டும் தனக்கு தொந்தரவு செய்வாரோ என்ற கடும் மன உளைச்சலில், பெண்ணுக்கு இதுபோல ஆபாச வீடியோக்களிலும் போட்டோக்களையும் அனுப்பத் தொடங்கி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் ஐடியை விசாரித்ததில் அது போலி ஐடி என்பதும் போட்டோக்களும் வீடியோக்களும் அனைத்துமே மார்ஃபிங் செய்யப்பட்டவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இளம் பெண்ணுடன் பழகி பின்னர் பிளாக் மெயிலில் ஈடுபட்டு வந்த வியாசர் பாடியைச் சேர்ந்த 28 வயது பைக் டாக்ஸி டிரைவர் ஜோ ரிச்சர் நேற்று முதல் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

– செய்தி பிரிவு