அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு அதாவது சுமார் 6800 மாணவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் என்பதும் உலகின் 100 வெவ்வேறு நாடுகளில் இருந்து இந்த மாணவர்கள் அங்கு படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பலக்லைக்கழங்களில் அதிகரித்து வரும் மாணவர் போராட்டங்களை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹார்வர்ட் பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அமெரிக்க அரசு கடந்த வாரம் நிறுத்தியது.
சுமார் 3800 கோடி ரூபாய் (450 மில்லியன் அமெரிக்க டாலர்) மானியங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் பல்கலைக்கழங்கள் நிதி சிக்கலில் சிக்கித் தவித்தது.
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு மாறவும் உத்தரவிட்டுள்ளார்.
அதிபரின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது என்று ஹார்வர்ட் பலக்லைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.